புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x
தினத்தந்தி 8 Oct 2021 6:30 PM GMT (Updated: 8 Oct 2021 6:30 PM GMT)

தினத்தந்தி புகாா்பெட்டி

 குவிந்து கிடக்கும் குப்பைகள் 

கோபி அருகே நஞ்ச கவுண்டம்பாளையத்தில் இருந்து கள்ளிப்பட்டி செல்லும் ரோட்டில் சின்ன வாய்க்கால் உள்ளது. அதன் ஓரமாக குப்பைகள் கொட்டப்பட்டு் குவிந்து கிடக்கிறது. மேலும் பொதுப்பணித்துறையினர், குப்பை கொட்டுவதை தவிர்க்கவும் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி குப்பைகள் கொட்டப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்கால் ஓரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி


பாதாள சாக்கடையில் அடைப்பு (படம்)

ஈரோடு கருங்கல்பாளையம் குப்பைக்காடு சடையப்பாரோட்டில் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் பீறிட்டு வெளியேறி வருகிறது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், கருங்கல்பாளையம்.


வீடுகளுக்குள் வரும் கழிவுநீர்

  ஈரோடு 3-ம் மண்டலத்துக்கு உள்பட்ட சென்னிமலை ரோடு காசிபாளையம் அருகே முத்தம் பாளையம் வீட்டு வசதி வாரியம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகத்துக்கு எதிரே உள்ள தார் சாலை முதல் வீதியில் உள்ள சில வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடைக்குள் வரும் கழிவுகள் அனைத்தும் முத்தம்பாளையம் பகுதி-3 மெயின் ரோடு வரை வந்து தேங்கி விடுகிறது. அதை தாண்டி பாதாளச் சாக்கடை செல்வதற்கான முக்கிய இணைப்பு இல்லை. இதனால் பாதாள சாக்கடை நிரம்பி வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கழிவுநீர் புகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ப.சிராஜுதீன், முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதி-3, காசிபாளையம்.

-------------

சாலை சீரமைக்கப்படுமா?

  நம்பியூர் கரட்டுப்பாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் அருகே பள்ளிக்கூடம் செல்லும் வழியில் தார்ரோடு உள்ளது. இது கடந்த பல மாதங்களாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.பி.கார்த்திக்குமார், கரட்டுப்பாளையம்.


------------

தேங்கும் கழிவுநீர்
ஈரோடு சம்பத்நகர் உழவர்சந்தை அருகே செல்லும் சாக்கடை கழிவுநீரில் அடைப்பு ஏற்பட்டு் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நோய் பரவாமல் தடுக்க உடனே கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சம்பத்நகர்.




Next Story