பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜனதாவினர் மீது வழக்கு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம்நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
மதுரை,
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் பா.ஜ.க.வினர் மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மதுரை மாவட்ட பா.ஜனதா தலைவர் சீனிவாசன், மாநில தலைவர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதில் மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் கொரோனா நெறிமுறைகளை மீறி கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததாக பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் அனைவர் மீதும் மீனாட்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story