மெட்ரோ ரெயில் பணிகள்; மாதவரம் ஹைரோடு ஒரு வழிப் பாதையாக மாற்றம்
மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக மாதவரம்-பெரம்பூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக, பெரம்பூரில் உள்ள செம்பியம் பகுதியில் உள்ள சாலைகளில் வைத்து மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த பகுதியில் அக்டோபர் 10 முதல் 25ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மூலக்கடையிலிருந்து பெரம்பூர் ரெயில் நிலையம் வரும் வாகனங்கள் லக்ஷ்மி அம்மன் கோவில் தெரு வழியாக, மேல்பட்டி பொன்னப்பன தெரு, பரியல் ரோடு, பெரம்பூர் ஹைரோடு வழியாக மாற்றி விடப்படும்.பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மூலக்கடை செல்லும் வகனங்கள் மாதவரம் ஹைரோடு வழியாக செல்லலாம்.
போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை பொதுமக்கள் முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Related Tags :
Next Story