ஒரத்தூர் நீர்த்தேக்க பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


ஒரத்தூர் நீர்த்தேக்க பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2021 12:56 PM IST (Updated: 9 Oct 2021 12:56 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தூர் நீர்த்தேக்க பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் அடையாற்றின் கிளை நதியான ஒரத்தூர் ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டு ‌பணி முடிவடையாமல் மந்த கதியில் நடந்து வருகிறது.

மழைகாலத்தில் வெள்ளம் கடலில் வீணாக கலப்பதுடன் அடையாறு படுகையில் அடையாற்றின் வடிநிலப் பகுதியில் உள்ள வெள்ளை பாதிப்பை குறைப்பதற்கு ஒரத்தூர் ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அதிகாரிகள் பார்வையிட்ட போது இந்த நீர்த்தேக்கம் விரைவில் முடிவடையும் என தெரிவித்தனர். ஓரத்தூர் ஆரம்பாக்கம் ஏரியை இணைத்து நீர்த்தேக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் சென்னை பெருநகரத்துக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க இயலும். பணி தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் தடுப்பணை பகுதிகளில் பணி முழுமையாக முடிவடையாமல் மந்தகதியில் நடந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் நீர்த்தேக்கம் மற்றும் கால்வாய் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story