புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 9 Oct 2021 4:45 PM GMT (Updated: 9 Oct 2021 4:45 PM GMT)

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.

புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.
கோபி
 புரட்டாசி 4-வது சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கோபி டவுன் அக்ரஹாரம். பெருமாள் கோவில் வீதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆனால் கோவில் கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் கதவின் மேலும், வாசல்களிலும் துளசி மலர்களை வைத்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
மூலவாய்க்கால்
இதேபோல் கோபி அருகே உள்ள மூலவாய்க்கால் மலை கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 8 மணி அளவில் சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.
மேலும் கோபி அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனால் பக்தர்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் சன்னிதி, இச்சிப்பாளையம் கிராமத்தில் கோனப்பெருமாள் கோவில், கிழக்காலூரில் உள்ள பெருமாள் கோவில், வடக்கு புதுப்பாளையம் கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உள்ள பால ஆஞ்சநேயர் சன்னிதி, கொளாநல்லியில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அழகுராஜா பெருமாள் கோவில் உள்ளது. இங்கு அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. 
அந்தியூர் தேர் வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவிலுக்கு திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் பருவாச்சி மலையில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில்கள் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் வாசலில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

Next Story