ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி புதிதாக 91 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 91 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 91 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
91 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 245 பேருக்கு பரிசோதனை செய்ததில், 82 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 666 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 102 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 991 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
2 பேர் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 54 வயது பெண் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்தார்.
மேலும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவர் கடந்த 6-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 676 ஆக உயர்ந்தது. தற்போது தொற்று உள்ள 999 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story