சத்தியமங்கலத்தில் தோட்டத்தில் பதுக்கிய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகள் பறிமுதல்


சத்தியமங்கலத்தில் தோட்டத்தில் பதுக்கிய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Oct 2021 11:13 PM IST (Updated: 9 Oct 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. புதுவடவள்ளியில் கர்நாடக போலீசாரை சத்தி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலத்தில் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. புதுவடவள்ளியில் கர்நாடக போலீசாரை சத்தி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சந்தன மரக்கட்டைகள் பதுக்கல்
கர்நாடக மாநிலம் கோழிப்பாளையத்தில் சந்தன மரக்கட்டைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தோட்ட பகுதியில் சந்தன மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கர்நாடக போலீசார் அந்த நபரை அழைத்துக்கொண்டு ஒரு வேன் மற்றும் காரில் நேற்று காலை சத்தியமங்கலம் வந்தனர். இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
கர்நாடக போலீசார் அந்த நபர் கூறிய தோட்ட பகுதிக்கு சென்றனர். அங்கு  15 மூட்டைகளில் சந்தனமரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த மூட்டைகளை சோதனை செய்தபோது அவற்றில் 400 கிலோ சந்தனக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
தடுத்து நிறுத்தி சோதனை
பின்னர் அவற்றை வேனில் ஏற்றிக்கொண்டு கர்நாடகாவுக்கு போலீசார் சென்று கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளியில் சென்றபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த சத்தியமங்கலம் போலீசார் கர்நாடக போலீசார் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சந்தனக்கட்டைகள் இருந்ததை பார்த்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை விசாரித்தபோது, தாங்கள் கர்நாடக போலீசார் என்று அடையாள அட்டையை காட்டினார்கள். இதுபற்றி சத்தியமங்கலம் போலீசார்  வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பரபரப்பு
அவர்கள் இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரியிடம் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரி கர்நாடக போலீசாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் நடந்த விவரங்களை தெரிவித்தனர். அதன்பின்னரே கர்நாடக போலீசார் அங்கிருந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
 கர்நாடக போலீசார் பறிமுதல் செய்த சந்தன மரக்கட்டைகள் பல லட்சக்கணக்கான ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story