pugar petti


pugar petti
x
தினத்தந்தி 10 Oct 2021 2:59 AM IST (Updated: 10 Oct 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

தேங்கும் கழிவுநீர் 

கவுந்தப்பாடி கண்ணாடி புதூர் ரோஜா நகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி ரோட்டில் ஆறுபோல் ஓடுகிறது. அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. ரோட்டில் செல்ல சிரமமாக உள்ளது. உடனே கழிவுநீர் அடைப்பை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ரமேஷ், கவுந்தப்பாடி.
  ------------
பஸ்கள் நின்று செல்லுமா?

  பெருந்துறை சிப்காட்டில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் பஸ்கள் இங்கு நிறுத்தப்படுவதில்லை. எனவே பெருந்துறை சிப்காட்டில் பஸ்கள் நின்று ெசல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சி.ஆர்.பாண்டுரங்கன், பெருந்துறை சிப்காட்.
  
நிழற்குடை வேண்டும்

  ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் வாய்க்கால்மேடுவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே இங்கு நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், பள்ளிபாளையம்.
 


சுகாதார சீர்கேடு 

  ஈரோடு பழையபாளையம் இந்திராநகர் பகுதியில் கற்கள் மற்றும் மண் குவிக்கப்பட்டு கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை வடிகால் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. எனவே எங்கள் பகுதியில் போடப்பட்டு உள்ள மண், கற்களை அகற்றி, கழிவுநீர் வடிகாலில் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.நவநீதா, பழையபாளையம்.


குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கரட்டூர் பிரிவு வருகிறது. அதிலிருந்து பாரியூர்-அத்தாணி ரோடு பிரிகிறது. அந்த ரோட்டில் 3 இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியவில்லை. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஸ்வம், கோபி.


தெருவிளக்கு எரியவில்லை

  நம்பியூர் விநாயகர் கோவில் தெருவில் மின்கம்பம் உள்ளது. இதில் உள்ள மின்விளக்கு கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் பெண்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே அந்த தெருவிளக்கு ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நம்பியூர்.

நாய்கள் தொல்லை 

  மூலப்பாளையம் டெலிபோன் நகர் விநாயகர் கோவில் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகின்றன. நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருவில் செல்பவர்களை கடிக்கிறது. எனவே தெருக்களில் அலைந்து திரிந்த தொல்லை கொடுக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.செந்தில்குமார், டெலிபோன் நகர்.

Next Story