உறவினர் பண மோசடி செய்ததால் ஆத்திரம்: வியாபாரி மீது தாக்குதல் 4 பேர் கைது


உறவினர் பண மோசடி செய்ததால் ஆத்திரம்: வியாபாரி மீது தாக்குதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2021 8:20 AM IST (Updated: 10 Oct 2021 8:20 AM IST)
t-max-icont-min-icon

உறவினர் பண மோசடி செய்ததால் ஆத்திரம்: வியாபாரி மீது தாக்குதல் 4 பேர் கைது.

சென்னை,

சென்னை புதுப்பேட்டை வேலாயுதம் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 43). இவர், பலரிடம் பணம் பெற்று திருப்பி அளிக்காமல் மோசடி செய்துவிட்டதாக கடந்த 6-ந்தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கிறிஸ்துராஜ் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் பணத்தை இழந்தவர்கள் சிலர் திருவல்லிக்கேணி பகுதியில் வியாபாரம் செய்து வரும் அவரது மனைவியின் சகோதரர் சஜினிடம் சென்று கிறிஸ்துராஜ் எங்கு இருக்கிறார்? என்றுக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை புதுப்பேட்டை பகுதிக்கு அழைத்துச்சென்று கடுமையாக தாக்கினர்.

இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சஜின் மீது தாக்குதல் நடத்திய புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது ஹக்கீம் (35), ராஜ் (42), ராஜா ஹூசைன் (53), கொளத்தூர் கம்பர் நகரை சேர்ந்த முகமது சுல்தான் (58) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story