திருவள்ளூரில் குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது


திருவள்ளூரில் குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2021 11:57 AM IST (Updated: 10 Oct 2021 11:57 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின் பேரில், திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் திருவள்ளூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த பெரிய பையுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை விரட்டிச்சென்று பிடித்து விசாரித்த போது, அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 ஆயிரத்து 500 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்த சீதாராமன் (வயது 30) என தெரியவந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story