பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு; வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம்


பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு; வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம்
x
தினத்தந்தி 11 Oct 2021 3:10 AM IST (Updated: 11 Oct 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ஈரோடு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
பெட்ரோல் -டீசல் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழக அரசு பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்ததன் காரணமாக, கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 75 காசுக்கு விற்பனையானது. இது நேற்று மேலும் 26 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 1 காசுக்கு விற்பனையானது.
வாகன ஓட்டிகள் அச்சம்
இதைப்போல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் 97 ரூபாய் 43 காசுக்கு விற்பனையானது. நேற்று மேலும் 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 97 ரூபாய் 76 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர தொடங்கி உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story