வீடு, கடை, கட்டிடங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ.10 லட்சம் வரை அபராதம்


வீடு, கடை, கட்டிடங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ.10 லட்சம் வரை அபராதம்
x
தினத்தந்தி 11 Oct 2021 8:13 PM IST (Updated: 11 Oct 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு கொசுப்புழு வளரும் இடங்கள் கண்டறியப்படும் வீடுகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுப்புழு வளரும் இடங்கள் கண்டறியப்படும் வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அபராதமும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் அபராதமும், கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் அபராதமும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் அபராதமும், ஓட்டல்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் அபராதமும், வணிக வளாகம், அரசு கட்டிடங்கள், தொழிற்சாலைகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

இதேபோல் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் அபராதமும், 5 ஆயிரம் சதுர அடிக்கு குறைவான கட்டுமான இடங்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் அபராதமும், 50 படுக்கைகளுக்கு கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் அபராதமும், 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டுமான இடங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story