கணவருடன் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலி


கணவருடன் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
x
தினத்தந்தி 12 Oct 2021 2:52 AM IST (Updated: 12 Oct 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அலங்காநல்லூர், 
அலங்காநல்லூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கூலி தொழிலாளி
மதுரை மாவட்டம் பாலமேட்டை சேர்ந்தவர் மலையன், கூலி தொழிலாளி.இவரது மனைவி  தமிழரசி (வயது53). இவர்கள் 2 பேரும் மதுரையில் இருந்து அலங்காநல்லூர் சாலையில் பாலமேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் பாசிங்காபுரம் வழியாக சென்றனர். 
அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று மலையன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த தமிழரசி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் கணவர் கண் எதிரே பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இறந்த பெண்ணின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Tags :
Next Story