அந்தியூரில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
அந்தியூரில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.
அந்தியூர்
அந்தியூர் அருகே நகலூர் முனியப்பன்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் அன்பழகன் (வயது 23). லாரி டிரைவர். குப்பாண்டபாளையம் தோப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகள் சுமித்ரா (20). பி.எஸ்சி. பட்டதாரி.
அன்பழகனும், சுமித்ராவும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். இவர்களுடைய காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்தநிலையில் காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி திருப்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார்கள். பின்னர் பாதுகாப்பு கேட்டு ஆப்பக்கூடல் போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்கள். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்தார்கள். ஆனால் சுமித்ராவின் பெற்றோர் வரவில்லை. இதையடுத்து போலீசார் காதல் ஜோடியை அன்பழகனின் பெற்றோருடன் அனுப்பி வைத்தார்கள்.
Related Tags :
Next Story