ஈரோட்டில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு


ஈரோட்டில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு
x
தினத்தந்தி 12 Oct 2021 3:39 AM IST (Updated: 12 Oct 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்ந்தது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 102 ரூபாய் 1 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று மேலும் 26 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 27 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், 97 ரூபாய் 76 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் நேற்று மேலும் 33 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 9 காசுக்கு விற்பனையானது. பெட்ரோல் விலை ரூ.102-ஐ தாண்டியும், டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கும் நிலையில் உள்ளதால் அனைத்து வாகன ஓட்டிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story