மூதாட்டி தவறி விழுந்து பலி
மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
மதுரை,
மதுரை நாராயணபுரம் பாண்டியன்நகர், நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 85). இவர் அவருடைய மகன் முத்துவேல் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்றுகாலை 6 மணிக்கு பால் வாங்க சென்றவர் வெகுநேரமாகியும் வீடுதிரும்பவில்லை. எனவே அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி சென்றனர். ஆனால் எங்கும் அவரை காணவில்லை.
இந்த நிலையில் வீட்டின் அருகே கழிவுநீர் சாக்கடை தொட்டியில் அந்த பகுதி சிறுவர்கள் யாரோ இருப்பது போன்று தெரிவ தாக அங்கு தேடியவர்களிடம் கூறியுள்ளனர்.
உடனே அங்கு பார்த்தபோது தண்ணீரில் மூழ்கிய வள்ளியம்மாளை இறந்த நிலையில் மீட்டனர். பின்னர் இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story