காஞ்சீபுரத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


காஞ்சீபுரத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2021 2:14 PM IST (Updated: 12 Oct 2021 2:14 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி காஞ்சீபுரம் மாவட்ட குழு சார்பில் காஞ்சீபுரம் பெரியார் தூண் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, வன்முறையை ஏவி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்காதே, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதேபோல் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் மன்றத்தினர், விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story