காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலமாக இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சத்து 26 ஆயிரம் நபர்களில் முதல் தவணையாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 638 நபர்களும், 2-வது தவணையாக 1 லட்சத்து 77 ஆயிரத்து 430 நபர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 10-ந் தேதி 600 மையங்களில் 48 ஆயிரம் நபர்களுக்கு செலுத்த திட்டமிட்டு மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.
இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. மேலும் முதல் தவணை செலுத்தி கொண்ட நபர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்தி கொள்ள ஏதுவாக அவர்களின் விவரங்கள் அந்தந்த வட்டார மற்றும் நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவ்வகையில் ஒரே நாள் சிறப்பு முகாமில் 31 ஆயிரத்து 8 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story