குடோனில் 3 லட்சம் கொள்ளை
குடோனில் 3 லட்சம் கொள்ளை
கூடலூர்
கூடலூரில் ஆன்லைனில் விற்கும் பொருட்களை வினியோகம் செய்யும் குடோனில் ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.3 லட்சம் கொள்ளை
பன்னாட்டு நிறுவனங்களில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வீடுகளுக்கு வினியோகம் செய்யும் குடோன் கூடலூர் 1-ம் மைல் பகுதியில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்ததும் மேலாளர் நவீன் ராஜ் உட்பட ஊழியர்கள் குடோனை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர்.
நேற்று காலை 8 மணிக்கு ஊழியர்கள் கடைக்கு வந்தனர். அப்போது கடையின் இரும்பு ஷட்டர் கதவு உடைத்து இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் இருந்த ரூ.3 லட்சத்து 11 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து மேலாளர் நவீன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் குறித்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஊட்டியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள், கொள்ளை நடந்தகுடோனில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story