திமுக வேட்பாளர்கள் அபார வெற்றி


திமுக வேட்பாளர்கள் அபார வெற்றி
x
தினத்தந்தி 12 Oct 2021 7:02 PM IST (Updated: 12 Oct 2021 7:02 PM IST)
t-max-icont-min-icon

திமுக வேட்பாளர்கள் அபார வெற்றி

கூடலூர்

கூடலூர் ஊராட்சி ஒன்றிய 4, 11-வது வார்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர்..

வாக்கு எண்ணும் பணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் - 4 (மசினகுடி), வார்டு எண் - 11 (சேரங்கோடு) ஆகிய 2 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி இடங்களுக்கும் கடந்த 9-ந் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது.

 இந்த 2 ஒன்றிய வார்டுகளில் போட்டியிட தலா 6 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

4-வது வார்டு மசினகுடியில் 3 ஆயிரத்து 786 வாக்காளர்களும், 11-வது வார்டு சேரங்கோட்டில் 4,563 வாக்காளர்களும் உள்ளனர். 4 -வது வார்டில் 2,439 வாக்குகளும், 11-வது வார்டில் 2,772 வாக்குகளும் பதிவாகின. 

ஓட்டுகள் பதிவான வாக்குப்பெட்டிகள் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. 

4-வது வார்டு

வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மொத்தம் 6 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 4-ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உத்தமன் 1,249 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அ.தி.மு.க. வேட்பாளர் சாமிநாதன் 764 வாக்குகள் பெற்றார். இதனால் 485 வாக்குகள் கூடுதலாக பெற்று உத்தமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
4-வது வார்டில் போட்டியிட்ட மற்றவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு

ஆரபாத் (கைப்பை)- 38, கவியரசன் (கரும்புவிவசாயி)- 136, நசீர் (தண்ணீர் குழாய்)- 184, ராஜேந்திரன் (பிரஷ்குக்கர்) -31 ஓட்டுகள் பெற்றனர். இந்த வார்டில் 37 ஓட்டுகள் செல்லாதவை.

11-வது வார்டு

கூடலூர் ஊராட்சி ஒன்றிய 11-வது வார்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாரதி 1,706 வாக்குகளும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட லினிஸ் 591 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் 1,115 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

11-வது வார்டில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு

அசோக்குமார் (தண்ணீர்குழாய்)- 235, தமிழ்செல்வன் (கரும்பு விவசாயி)- 143, பாலசுப்பிரமணியம் (தீப்பெட்டி)- 36, பூவேந்திரன் (பிரஷ்குக்கர்) -10 ஓட்டுகள் பெற்றனர். இந்த வார்டில் 51 ஓட்டுகள் செல்லாதவை.

வெற்றி பெற்ற உத்தமன், பாரதி ஆகியோருக்கு ஊராட்சி உதவி இயக்குன ரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாம் சாந்தகுமார் வெற்றி  சான்றிதழ் வழங்கினார். 

Next Story