தண்டவாளம் சீரமைப்பு பணியில் தொய்வு
தண்டவாளம் சீரமைப்பு பணியில் தொய்வு
குன்னூர்
குன்னூர் பகுதியில் மழை பெய்வதால் தண்டவாள சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. எனவே இன்றும் (புதன்கிழமை) மலை ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
பாறாங்கற்கள் விழுந்தன
ஊட்டியில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட் டுப்பாளையம் முதல் ஊட்டி வரை செல்லும் மலை ரெயிலில் இயற்கை அழகை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் பயணம் செய்து மகிழ்கின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு 4 பெட்டிகளுடன் மலை ரெயில் புறப்படும். தற்போது குன்னூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் குன்னூர் -மேட்டுப்பாளையம் மலை ரெயில் தண்டவாள பாதையில் பாறாங்கற்கள் விழுந்தன. மேலும் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
மலை ரெயில் ரத்து
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம் -குன்னூர் மலை பாதையில் கல்லார் -ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்ப்பட்டது. இதன் காரணமாக 10-ந் தேதி மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து தண்டவாளத்தில் விழுந்த மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த 11 மற்றும் 12 -ந் தேதிகளில் மேட் டுப்பாளையம் -ஊட்டி இடையே மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
பணியில் தொய்வு
இந்த நிலையில் மழையின் காரணமாக தண்டவாளத்தில் விழுந்த பாறாங் கற்கள் மற்றும் மண்ணை அகற்றி சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட் டது. மேலும் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஊழியர்களால் சீரமைப்பு பணியில் ஈடுபட முடியவில்லை.
நேற்று மழை இல்லாத காரணத்தால் ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுப்பட்டனர். ஆனாலும் தண்டவாள சீரமைப்பு பணி முடிய வில்லை.
அந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்றும் (புதன்கிழமை) மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story