12 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்


12 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
x
தினத்தந்தி 12 Oct 2021 7:49 PM IST (Updated: 12 Oct 2021 7:49 PM IST)
t-max-icont-min-icon

12 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்

ஊட்டி

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நீலகிரியில் 12 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

மருத்துவ முகாம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், வருமுன் காப்போம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி ஊட்டி அருகே சாந்தூரில் ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்றது. 
இதை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

இது குறித்து கலெக்டர் கூறியதாவது:

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் ஏழை, எளியோருக்கு வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் வகையில் மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

சிறப்பு டாக்டர்கள்

இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிப்படை மருத்துவ பரிசோதனை, ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். உயர் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு பரிந்துரை செய்யப்படும். 


சிறப்பு டாக்டர்கள் பரிசோதனைகள் செய்து தேவைப்படும் நபர்கள் மேல் சிகிச்சை பெற உயர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ள மருத்துவ முகாம்களில் ரத்தம் அளவு, ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு, இ.சி.ஜி. பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்ட றிதல், 

கண்புரை ஆய்வு, பார்வை குறைபாட்டிற்கு மூக்கு கண்ணாடி கள் வழங்குதல், கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 4 வட்டாரங்களில் 12 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story