கொரோனாவால் 19 பேர் பாதிப்பு


கொரோனாவால் 19 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2021 12:27 AM IST (Updated: 13 Oct 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் 19 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மதுரை, 
மதுரையில் நேற்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 16 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 24 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 19 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 73 ஆயிரத்து 445 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதன் மூலம் சிகிச்சையில் இருப் பவர்களின் எண்ணிக்கையும் 273 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Next Story