மாவட்ட செய்திகள்

பெருந்துறை ஊராட்சி ஒன்றிய இடைத்தேர்தல்: ஒரு ஓட்டு கூட வாங்காத சுயேச்சை வேட்பாளர்கள் + "||" + local body bye election

பெருந்துறை ஊராட்சி ஒன்றிய இடைத்தேர்தல்: ஒரு ஓட்டு கூட வாங்காத சுயேச்சை வேட்பாளர்கள்

பெருந்துறை ஊராட்சி ஒன்றிய இடைத்தேர்தல்: ஒரு ஓட்டு கூட வாங்காத சுயேச்சை வேட்பாளர்கள்
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய இடைத்தேர்தல்: ஒரு ஓட்டு கூட வாங்காத சுயேச்சை வேட்பாளர்கள்
பெருந்துறை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 9 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தேர்தல் நடந்து முடிந்து, நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் பதிவான 4683 வாக்குகளில், தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் 2804 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் பாலகிருஷ்ணன் 1738 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் பொன்னுச்சாமி 38 வாக்குகளும் பெற்றிருந்தனர். மீதமுள்ள 6 சுயேட்சை வேட்பாளர்களில், 4 பேர் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்களில் வாக்குகள் பெற்றிருந்தனர். 
ஆனால் இதில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் சண்முகம், திருமூர்த்தி ஆகியோர் ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை. இவர்கள் தங்களுடைய வாக்குகள் இடம் பெற்றிருக்கும் வார்டில் இல்லாமல் வேறு வார்டில் போட்டியிட்டதால் அவர்களுடைய ஓட்டையும் அவர்களுக்கு போட்டுக்கொள்ள முடியவில்லை. தாங்கள் போட்டியிட்ட வார்டில் ஒருவர் கூட ஓட்டு போடாததால் சுயேச்சை வேட்பாளர்கள் இருவருமே பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 10 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 10 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
2. நீலகிரியில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 8800 பேர் வாக்களிக்க உள்ளனர்.
நீலகிரியில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 8,800 பேர் வாக்களிக்க உள்ளனர். 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.