மாவட்ட செய்திகள்

மொடக்குறிச்சி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை + "||" + suicide

மொடக்குறிச்சி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

மொடக்குறிச்சி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
மொடக்குறிச்சி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணற்றில் குதித்து...
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா (வயது 23). இவர்களுடைய மகள் பவன்யா (4).  இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் நேற்று ரம்யா தனது குழந்தை பவன்யாவுடன் குதித்து விட்டார். 
இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கிணற்றில் குதித்து  ரம்யாவையும், பவன்யாவையும் மீட்டனர். எனினும் இவர்கள் 2 பேரும் இறந்துவிட்டனர். 
வயிற்று வலி
இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரம்யா, பவன்யா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அவரின் முதல் கட்ட விசாரணையில், ‘ரம்யாவுக்கு கடந்த 4 மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். ஆனாலும் வயிற்று வலி குணமாகவில்லை. 
சோகம்
இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது,’ தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  குழந்தையுடன், கிணற்றில் தாய் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டீக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
டீக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
3. பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
4. 200 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை
மேல்மலையனூர் அருகே இழப்பீடு தொகை தராததால் 200 அடி உயர உயர மின்கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
5. பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மதுரையில் பிளஸ்-2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். “புதிய பயணத்தை நோக்கி செல்கிறேன்” என்று அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.