பர்கூர் மலைப்பகுதியில் கால் சறுக்கி பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை சாவு
பர்கூர் மலைப்பகுதியில் கால் சறுக்கி பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை இறந்தது.
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் கால் சறுக்கி பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை இறந்தது.
இறந்து கிடந்த யானை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் கோவில்நத்தம் ஓங்கேபள்ளம் சராகம் என்ற இடத்தில் மலை சரிவில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட வன அதிகாரி கவுதம் உத்தரவின்பேரில் உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) சவுமியா தலைமையில் வனத்துறையினர் கால்நடை டாக்டருடன் சம்பவ இடத்துக்கு சென்றார்கள்.
உருண்டு விழுந்தது
இதையடுத்து கால்நடை டாக்டர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அவர் கூறும்போது, இறந்து கிடந்தது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்றும், வயது முதிர்வின் காரணமாக நடக்க சிரமப்பட்டுள்ள இந்த யானை மலை பள்ளத்தில் கால் சறுக்கி உருண்டு விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். அதன்பின்னர் மற்ற விலங்குகளுக்கு உணவாக யானையின் உடல் அதே இடத்தில் விடப்பட்டது.
Related Tags :
Next Story