மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Oct 2021 10:32 PM IST (Updated: 13 Oct 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வாடிப்பட்டி, 
மதுரை மாவட்டம் சமயநல்லூர் கோட்டம் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் விக்கிரமங்கலம் துணை மின் நிலையங்களில் 16-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. 
இதனால் மாணிக்கம்பட்டி பகுதியில் உசிலம்பட்டி, மறவ  பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, தெத்தூர் மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, பாலமேடு நகர் பகுதிகள், ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விக்கிரமங்கலம் மின் நிலையத்துக்கு உட்பட்ட காடுபட்டி, புதுப்பட்டி, கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, மேலபெருமாள்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல் பட்டி, அரசமரத்துபட்டி, நரியம்பட்டி, பாண்டியன் நகர், கள்புலிசான்பட்டி, குளத்துப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவனம்பட்டி, வடுகபட்டி, உடன் காடுபட்டி, கொடிக்குளம், ஜோதிமாணிக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story