புகார் பெட்டி
புகார் பெட்டி
கூடுதல் டிரான்ஸ்பார்மர் தேவை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் பஞ்சாயத்து ராம்சுந்தர் நகர், அண்ணாமலைபுரம், செந்தில்நகர், உலகம்மை நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி குறைந்த அழுத்த மின்சாரம் ஏற்படுகிறது. சில நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் கூடுதலாக டிரான்ஸ்பார்மர் வைத்து சீராக மின்வினியோகம் செய்யப்படுமா?
பொதுமக்கள், காரைக்குடி.
சாலை வசதி
மதுரை விலாங்குடி வெங்கடாசலபதி நகர் சிலம்பு தெருவில் சாலை வசதி இல்லாமல் மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையானது சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
பிராங்கிளின், விலாங்குடி.
ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வார சந்தை நடக்கும் இடத்தில் கடைகளை வைக்காமல் சிலர் பூவாணிக்கரையில் இருந்து சந்தை வரையிலான இருபுறமும் சாலைகளில் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபுமாஅபுபக்கர், ஆர்.எஸ்.மங்கலம்.
குப்பைகள் அகற்றப்படுமா?
மதுைர ஆனையூர் ஹவுசிங்போர்டு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த குப்பை கழிவுகளை சாலையோரத்தில் குவித்து வைத்தனர். ஆனால் இதுநாள் வரை அந்த குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, குப்பைகளை அள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜான்சன், மதுரை.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இங்குள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
உமையலிங்கம், விருதுநகர்.
சுடுகாடு சீரமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் மங்களக்குடி 28-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சுடுகாடு உள்ளது. ஆனால் இந்த சுடுகாட்டில் போதிய இட வசதி இல்லை. இங்குள்ள தகர செட்டுகளும் சேதமடைந்து காணப்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாமலும் உள்ளது. எனவே, சுடுகாட்டை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமு, மங்களக்குடி.
`தினத்தந்தி’ செய்தி எதிரொலி
மதுரை தெப்பக்குளம்-வண்டியூர் இடையே வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் நீண்ட பள்ளம் காணப்பட்டது. இதனால் விபத்து அபாயம் உள்ளது என கடந்த 11-ந் தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது பாலத்தில் இருந்த பள்ளம் சரி செய்யப்பட்டது. மக்கள் நலன்கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் நன்றி.
சிவா, மதுரை.
Related Tags :
Next Story