மோட்டார் சைக்கிள் மீதுகார் மோதியதில் வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீதுகார் மோதியதில் வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Oct 2021 5:58 PM GMT (Updated: 13 Oct 2021 5:58 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீதுகார் மோதியதில் வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே அகரப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் இரவு மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கும்மங்குடியை சேர்ந்த நாகராஜன் மகன் அரவிந்தன் (வயது 25) சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் வைத்தூர் ராமச்சந்திரன் மகன் சசிகுமார் (24) படுகாயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story