தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கொள்ளை


தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 14 Oct 2021 12:25 AM IST (Updated: 14 Oct 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

நெல்லை:

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் நிறுவனத்தின் ஷட்டரை மட்டும் இழுத்து விட்டு பூட்டு போட்டு பூட்டாமல் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3.80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் நிறுவனத்தின் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
மேலும் இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story