கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்களை இருப்பு வைக்க சேமிப்பு கிடங்கு வசதி; கண்காணிப்பாளர் தகவல்
கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்களை இருப்பு வைக்க சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக அதன் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
கோபி
கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்களை இருப்பு வைக்க சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக அதன் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
கோபி சத்தி மெயின் ரோட்டில் கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனைக்கூடத்தில் விவசாயிகளும், வியாபாரிகளும் விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக இந்த விற்பனைக்கூடத்தில் 1000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு வசதி 2-ம், 30 மெட்ரிக் டன் கிடங்கு ஒன்றும் உள்ளது.
இந்த விற்பனைக்கூடத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்க விவசாயிகளிடம் இருந்து வாடகை வசூலிக்கப்படுகிறது.
சேமிப்பு வாடகை
இதில் அனைத்து வகையான விவசாய விளைபொருட்களுக்கும் (மஞ்சள் தவிர) குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 5 காசும், மஞ்சளுக்கு மட்டும் குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 20 காசும் சேமிப்பு வாடகையாக வசூல் செய்யப்படுகிறது.
இதேபோல் வியாபாரிகள் அனைத்து விவசாய விளைபொருட்களை (மஞ்சள் தவிர) சேமித்து வைக்க குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 10 காசும், மஞ்சளுக்கு மட்டும் குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 40 காசும் வாடகையாக வசூல் செய்யப்படுகிறது.
அனைத்து விவசாய விளைபொருட்களையும் 150 நாட்கள் வரை சேமிக்கலாம். மஞ்சளை மட்டும் 365 நாட்கள் வரை சேமிக்கலாம். விவசாயிகளுக்கு முதல் 15 நாட்களுக்கு வாடகை ஏதும் கிடையாது.
பொருளீட்டுக்கடன்
சேமித்து வைக்கப்படும் விவசாய விளைபொருட்களுக்கு பொருளீட்டுக்கடனாக விளைபொருட்களின் 50 சதவீதத்துக்கு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 சதவீத வட்டியுடன் 3 லட்சம் வரையும், வியாபாரிகளுக்கு 9 சதவீத வட்டியுடன் 2 லட்சம் வரை கடன் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் உலர் கள வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அளுக்குளி பிள்ளையார் கோவில் துறை பகுதியில் 1000 மெட்ரிக் டன் குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதியும் உள்ளது. இந்த சேமிப்பு கிடங்குகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த தகவலை கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் நித்தியானந்தி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story