தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 14 Oct 2021 1:05 AM IST (Updated: 14 Oct 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் 7வது வார்டு , விஸ்வாஸ் நகர் செல்லும் சாலை சேறும் , சகதியுமாக வயல்வெளி போல் காட்சி அளிக்கிறது என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள்,  பூக்கொல்லைத்தெரு, திருச்சி.

குடிநீர் தட்டுப்பாடு 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் உள்ள காந்திநகர் தெருவில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 பார்த்திபன், கொடியாலம், திருச்சி. 

சாலை வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சி வுட்டப் மிமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் விஐபி நகர் 3-வது வீதி கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நூருல் ஹக், கோபாலபட்டினம், புதுக்கோட்டை.
இதேபோல் புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம், கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சண்முகநாதன், கீரமங்கலம், புதுக்கோட்டை.

வீணாகும் குடிநீர் 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காமராஜர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளை சிலை அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  மேலும் இந்த குடிநீர் சாலையில் செல்வதால் சாலையில் பள்ளம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், விராலிமலை, புதுக்கோட்டை. 

போக்குவரத்திற்கு இடையூறு
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அரசு காலனி, கரியாளி நகர் தெரு முகப்பில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாபு, அரசு காலனி, கரூர்.

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
அரியலூர் மாவட்டம், கீழப்பழுர் திருச்சி மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஶ்ரீ ரெங்கன் நகர் ஜெபகூடம் அருகே உள்ள குடியிருப்பில் வடிகால் வசதி இன்றி சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.  இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஸ்ரீரெங்கன்நகர், அரியலூர். 

பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையின் முன்பு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நித்யகல்யாணி, முள்ளூர், புதுக்கோட்டை. 

குண்டும், குழியுமான தார் சாலை 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி முதல் பிம்பலூர் வ.களத்தூர் வரை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.  இந்த சாலை வழியாக எசனை, வேப்பந்தட்டை, வெண்பாவூர், வடகரை, பாண்டகப்பாடி ஆகிய ஊர்களுக்கு அரசு பஸ் சென்று வருகிறது. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் குறித்த நேரத்திற்கு அரசு பஸ் செல்ல முடியவில்லை. மேலும் மற்ற  வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பாண்டகப்பாடி, பெரம்பலூர். 
வீணாகும் குடிநீர்
திருச்சி மாநகராட்சி 27வது வார்டு செந்தண்ணீர்புரம் நுழைவு பகுதி பாலத்திற்கு கீழே  ஒரு வாரமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுவதுடன் தண்ணீர் சாலையில் செல்வதால் சாலையில் பள்ளம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செந்தண்ணீர்புரம், திருச்சி. 

தெருவிளக்கு அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், பெரியாகருப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுபயபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே சென்றுவர பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் சட்டவிரோதமான செயல்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சச்சிதானந்தம், அந்தநல்லூர், திருச்சி. 

சாலையில் தேங்கும் மழைநீர் 
திருச்சி மாவட்டம், பிச்சாண்டவர் கோவில் பஞ்சாயத்து, நெ.1 டோல்கேட் மகாலட்சுமி நகர் சாலையில் வடிகால் வசதி இன்றி சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நெ.1 டோல்கேட், திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாவட்டம், பெரியமிளகுப்பாறை புதுத்தெருவில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதில் கால்நடைகள் மேய்வதால் துர்நாற்றம்வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரியமிளகுப்பாறை, திருச்சி. 

தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் 40 வது வார்டு  அரசு காலனி 3வது தெருவில் சில நாட்கள் முன் பெய்த மழை நீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் அதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் செல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் அதிக அளவில் சொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
தங்கவேல், அரசு காலனி, திருச்சி.

Next Story