பர்கூர் மலைப்பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர் சாய்ந்தது


பர்கூர் மலைப்பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர் சாய்ந்தது
x
தினத்தந்தி 14 Oct 2021 1:17 AM IST (Updated: 14 Oct 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைப்பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர் சாய்ந்தது.

அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர் சாய்ந்தது. 
மக்காச்சோள பயிர் சாய்ந்தது
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையும் பலத்த மழை பெய்தது.
 இதனால் மணியாச்சி நீர் ஓடை மற்றும் ஈரெட்டி பள்ளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஒரு பகுதி நீர் எண்ணமங்கலம் ஏரிக்கு வந்தது. இதேபோல் பர்கூர் கிழக்கு மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. 
பர்கூர் எலச்சிபாளையம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து நாசமாயின. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரிதும் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 
உரிய இழப்பீடு
வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மக்காச்சோள தோட்டங்களுக்கு நேரில் சென்று சேத மதிப்பை ஆய்வு செய்தார்கள். அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம், உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று வேதனையுடன் கோரிக்கை விடுத்தார்கள். 
அந்தியூர் அருகே உள்ள வரட்டுபள்ளம் அணை பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. 33.46 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 30 அடியாக உள்ளது. 

Next Story