பள்ளிபாளையம் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளிபாளையம் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Oct 2021 4:17 AM GMT (Updated: 14 Oct 2021 4:17 AM GMT)

பள்ளிபாளையம் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
 புதுமாப்பிள்ளை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலாம்பாளையம் குமரன் நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் பெருந்துறை சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், புதுநிலா (24) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
இந்தநிலையில்.நேற்று முன்தினம் இரவு புதுமாப்பிள்ளையான மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story