மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 2 பேர் சாவு + "||" + 2 deaths to Corona

தர்மபுரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 2 பேர் சாவு

தர்மபுரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 2 பேர் சாவு
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 32 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 364 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 271 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 67 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்