மாவட்ட செய்திகள்

பால் வியாபாரி தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். + "||" + attampt murder

பால் வியாபாரி தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பால் வியாபாரி தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பால் வியாபாரி தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி
திருமங்கலம், 
பால் வியாபாரி தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பால் வியாபாரம்
திருமங்கலம் அருகே உள்ள சின்ன வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அன்னகொடி மகன் செல்லப்பாண்டி (வயது 38). இவர் பால் பூத்து வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். 
நேற்றுமுன்தினம் இரவு பால் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையின் முன்புறம் படுத்திருந்தார். அப்போது மர்ம நபர்கள் கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 இதில் படுகாயம் அடைந்து அலறி துடித்த செல்லப்பாண்டியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு  அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். படு காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
விசாரணை
கொலை முயற்சிக்கான காரணம் குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி
காரையூர் அருகே மணல் கடத்தலை தடுத்த கிராமநிர்வாக அலுவலர், உதவியாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது.