வேலை வாங்கி தருவதாக மோசடி மின்வாரிய அதிகாரி வீட்டு முன் வாலிபர் தர்ணா போராட்டம்
வேலை வாங்கி தருவதாக மோசடி மின்வாரிய அதிகாரி வீட்டு முன் வாலிபர் தர்ணா போராட்டம்.
திருவொற்றியூர்,
சென்னை தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 31). இவரிடம், வடசென்னை அனல்மின் நிலையத்தில் உதவி என்ஜினீயராக வேலை பார்த்த பாபு (43) என்பவர் மின்வாரியத்தில் ஒப்பந்தம் பெற்று தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.40 லட்சம் வாங்கினார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை கேட்க சென்ற போது அடியாட்களை வைத்து மிரட்டுவதாக கூறி நேற்று காலை, எர்ணாவூர் கேட் பகுதியில் உள்ள பாபு வீட்டின் முன்பு சுரேஷ் தனது தாயுடன் தர்ணாவில் ஈடுபட்டார். பணத்தை திருப்பி தராவிடில், குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொள்வேன் எனவும் கோஷமிட்டார். எண்ணுார் போலீசார் சுரேசை சமாதானம் செய்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் படியும், இது குறித்து நியாயமான முறையில் விசாரிப்பதாக கூறினர். பின் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Related Tags :
Next Story