10 ஆண்டுகளுக்கு பிறகு பரங்கிமலை ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது


10 ஆண்டுகளுக்கு பிறகு பரங்கிமலை ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 14 Oct 2021 5:15 PM GMT (Updated: 14 Oct 2021 5:15 PM GMT)

10 ஆண்டுகளுக்கு பிறகு பரங்கிமலை ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் மொத்தம் உள்ள 11 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் 9 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது.

பரங்கிமலை ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜாய் செல்வக்கனி, சவுமியா, விசாலாட்சி, பிரசாத், பன்னீர் செல்வம், சங்கீதா, கல்பனா, மோகனப்பிரியா, மேடவாக்கம் ரவி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வாசுகி, சுயேச்சை வேட்பாளர் அமுதா வேல்முருகன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

Next Story