மாவட்ட செய்திகள்

வணிக வளாகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் + "||" + Kagandeep Singh Bedi urges the public to be careful when going to shopping malls

வணிக வளாகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள்

வணிக வளாகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள்
பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள், அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத்தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவு எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முககவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு தனிநபரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும்.


விடுமுறை நாட்களில் மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள நகர்புற சமுதாய நல மையங்கள் மற்றும் மகளிருக்கான மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் நகர்புற சமுதாய நல மையங்களில் தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு பயனடையலாம்.

கவனமாக இருக்க வேண்டும்

பண்டிகை விடுமுறை நாட்களான வியாழக்கிழமை (இன்று) மற்றும் வெள்ளிக்கிழமை (நாளை) வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மற்றும் காவல் துறையின் சார்பில் மேலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் மே மாதம் முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 9 ஆயிரத்து 554 நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் 90 ஆயிரத்து 226 தனிநபர்களிடமிருந்து ரூ.4 கோடியே 78 லட்சத்து 30 ஆயிரத்து 990 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஆஸ்பத்திரிகளில் ‘எக்ஸ்ரே’ முடிவுகளை படச்சுருளில் வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
அரசு ஆஸ்பத்திரிகளில் ‘எக்ஸ்ரே’ முடிவுகளை வெள்ளைத்தாளில் வழங்காமல் படச்சுருளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. ‘‘உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்’’ வாக்காளர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைய ‘‘உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்’’ வாக்காளர்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.
3. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
‘‘ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் கூடுதல் விழிப்புணர்வுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்’’ என, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை உறுதி செய்யும் வகையில் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து பருத்தி பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
‘மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து பருத்தி பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.