காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றிய தி.மு.க.


காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றிய தி.மு.க.
x
தினத்தந்தி 14 Oct 2021 7:15 PM GMT (Updated: 14 Oct 2021 7:15 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஒன்றியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 18 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க. சார்பில் 14 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரும், பா.ம.க. சார்பில் ஒருவரும், பா.ஜ.க. சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தி.மு.க. சார்பில் மோகனா இளஞ்செழியன், வளர்மதி, பாலாஜி, ஆதிலட்சுமி, ராம்பிரசாத் ஹேமலதா, மலர்க்கொடி கோடீஸ்வரி, ரேகா, தேவபாலன், அன்பழகன், பரசுராமன் திவ்யபிரியா, சங்கரி வெற்றி பெற்னர்.

அ.தி.மு.க. சார்பில் விமல்ராஜ், பேபி சசிகலா, பா.ஜ.க. சார்பில் நாகலிங்கம், பா.ம.க. சார்பில் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதிக இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றியது.

ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் மொத்தம் 93 ஆயிரத்து 763 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 44 ஆயிரத்து 645 ஆண் வாக்காளர்களும், 49 ஆயிரத்து 107 பெண் வாக்காளர்களும், 11 இதர வாக்காளர்களும் உள்ளனர். இதில் 81 ஆயிரத்து 453 வாக்குகள் பதிவாகின.

203 வாக்கு மையத்தில் பதிவான வாக்குகள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலுர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 16 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க.-8, காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-5, சுயேச்சை-2 வெற்றி பெற்றுள்ளனர்.

தி.மு.க. கூட்டணி கட்சியுடன் சேர்த்து 9 இடங்களை பிடித்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தை கைப்பற்றியுள்ளது.

தி.மு.க. சார்பில் ஹேமாவதி, கருணாநிதி, உஷா, அந்தோணி வினோத்குமார், மல்லிகா, மாலதி, கோமதி, பரமசிவன் ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வானதி, அ.தி.மு.க. சார்பில் சத்தியா, செந்திராஜன், நிஷாந்த், யுவராணிசேட்டு, புரட்சி பிரதம் கட்சியை சேர்ந்த சாந்தகுமாரி (அ.தி.மு.க.) வெற்றி பெற்றனர்.

சுயேச்சையாக தியாகராஜன், எல்லம்மாள் வெற்றி பெற்றுள்ளனர்.

வாலாஜாபாத்

வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 21 ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க. சார்பில் 15 பேரும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும், அ.தி.மு.க. சார்பில் இருவரும், சுயேச்சையாக இருவரும், பா.ம.க. சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தி.மு.க. சார்பில் சுனிதா, லோகிதாஸ், லோகநாயகி, வேண்டாமிர்தம், தேவேந்திரன், உலகநாதன், கவுரி, மீனா, அமலிசுதா, சேகர், எழிலரசி, கமலா, கலையரசி, சஞ்சய், ராணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அளவூர் நாகராஜன் வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் அக்ரி நாகராஜன், எஸ்.எஸ்.ஆர். சத்யா வெற்றி பெற்றுள்ளனர். பா.ம.க. சார்பில் காரை மணி வெற்றி பெற்றுள்ளார். அதிக இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றியது.

உத்திரமேரூர்

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 22 ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க. சார்பில் 18 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒருவரும், அ.தி.மு.க. சார்பில் 3 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தி.மு.க. சார்பில் ருத்ர கோடி, திருமலை, அண்ணாதுரை, வீரம்மாள், சுகுணா சுந்தர்ராஜன், ஹேமலதா ஞானசேகரன், கலைச்செல்வி, பானுமதி, ஞானசேகரன், அன்புராஜ், பவுன், துரை வேலு, சுப்பிரமணி, சந்திரன், கல்யாணசுந்தரம், நதியா, வசந்தகுமார், சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தீபா ஆகியோர் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. சார்பில் ராமச்சந்திரன், ரேவதி ரஞ்சித், மகேஸ்வரி ரவிச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றிபெற்ற தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், ஹேமலதா ஞானசேகரன் இருவரும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 19 இடங்களை கைப்பற்றிய தி.மு.க. கூட்டணி உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றியது.

குன்றத்தூர்

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 1-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழனியின் மனைவி விஜயாபழனியும், 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஏசுபாதமும் வெற்றி பெற்றனர்.

மேலும் 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்பு, அன்பழகன், பாண்டியன், லோகநாயகி, உஷா நந்தினி, உமா மகேஷ்வரி, சுதாகரன், அன்னம்மாள், பாலகிருஷ்ணன், மலர்விழி, லட்சாவதி, அன்பழகன், சங்கீதா, குமதா, மற்றொரு மலர்விழி, சரஸ்வதி, ராஜேந்திரன், ராஜலட்சுமி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மணிகண்டனும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் குன்றத்தூர் ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

Next Story