மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது + "||" + Chengalpattu District Panchayat Unions Captured

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது
செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது.
வண்டலூர்,

காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் தி.மு.க. 18 இடங்களில் வெற்றி பெற்று காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 4 இடங்களிலும், ம.தி.மு.க., பா.ம.க. தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. சார்பில் சோமசுந்தரம், ஆராமுதன், நேதாஜி, மோகனா என்கிற மோகனாம்பாள், தமிழ்ச்செல்வி, தினேஷ், சுந்தர்ராஜ், விஜயகுமார், சித்ரா, மோகனா, சரிதாபவுல், ஷீலா, அருள்தேவி, நிந்திமதி, சங்கமித்திரை, பிரேமலதா, தரணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.


ம.தி.மு.க. சார்பில் அம்சவள்ளி, அ.தி.மு.க. சார்பில் மகிளா, ஷாக்கீர் பாஷா, செல்வகுமாரி, சரளா, வெற்றி பெற்றனர். பா.ம.க. சார்பில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார்.

அச்சரப்பாக்கம்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றிய கவுன்சிலர்களில் 12 இடங்களை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. 4 இடங்களில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க, சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் விஜயலட்சுமி, ராமதாஸ், சிவபெருமான், நிர்மலா, சிலம்பரசன், மேகலா, பார்த்தசாரதி, பொன்மலர், கண்ணன், பானுமதிபாலசுப்பிரமணியன், சிவக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. சார்பில் ராஜேஸ்வரி ராமகிருஷ்ணன், விவேகானந்தன், ஜெயந்தி, சந்திரபாபு ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பா.ஜ.க.வை சேர்ந்த ரேவதி, சுயேச்சையாக பொற்செல்வி வெற்றி பெற்றுள்ளனர். 12 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றுகிறது.

மதுராந்தகம்

மதுராந்தகம் ஒன்றியத்தில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. அதில் அ.தி.மு.க. 7 இடங்களிலும், தி.மு.க. 10 இடங்களிலும் சுயச்சை 3 இடங்களிலும், பா.ஜ.க. ஒரு இடத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

தி.மு.க. சார்பில் கற்பகம், பரந்தாமன், உப்பிலால், ஸ்ரீமதி, பத்மபிரியா, லதா, சுஜாதா, தரணி, பிரியா, செல்லம்மாள். அ.தி.மு.க. சார்பில் குமரவேல் அப்பாதுரை, தமிழரசி, தணிகைவேல், மூர்த்தி, சங்கர், கார்த்திகேயன், கீதா கார்த்திகேயன், ஆகியோரும், பா.ஜ.க. சார்பில் ஜனனி தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அன்புச்செல்வன், சுயேச்சையாக தமிழ் குமரி, பாலசக்ரதன், ரேணுகா தேவி, ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பரங்கிமலை

சென்னையை அடுத்த பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் மொத்தம் உள்ள 11 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் 9 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது.

பரங்கிமலை ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜாய் செல்வக்கனி, சவுமியா, விசாலாட்சி, பிரசாத், பன்னீர் செல்வம், சங்கீதா, கல்பனா, மோகனப்பிரியா, மேடவாக்கம் ரவி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வாசுகி, சுயேச்சை வேட்பாளர் அமுதா வேல்முருகன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

லத்தூர்

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட 15 வார்டுகளில் 10 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. 5 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. லத்தூர் ஒன்றியத்தில் தி.மு.க.வை சேர்ந்த சீனிவாசன், ராமச்சந்திரன், சாந்தி ராமச்சந்திரன், ராணி பாண்டுரங்கன், சித்ரா ராஜேந்திரன், சுபலட்சுமி பாபு, செல்வகுமார், பார்வதி சண்முகம், மோகனா கோபிநாத், கிருஷ்ணவேணி தணிகாசலம் உள்ளிட்ட 10 பேர் வெற்றி பெற்றனர்.

அ.தி.மு.க.வை சேர்ந்த பார்வதி, ஜெய்சங்கர், சுஜாதா பாபு, அங்கையர்கண்ணி, நித்யானந்தம் வெற்றி பெற்றனர்.

சித்தாமூர்

சித்தாமூர் ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 இடங்களிலும் அ.தி.மு.க. 3 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் ஏழுமலை, ஜனனி, நாகப்பன், ரேவதி, குப்பன், இனிய மதி, ஜீவா, பாரதி, கன்னியப்பன், பிரேமா, ஆகியோரும் அ.தி.மு.க. சார்பில் குணசேகரன், கிரிஜா, பிரவீன் குமார் ஆகியோரும், காங்கிஸ் கட்சி சார்பில் செந்தமிழ், சுயேச்சைகள் மோகன்ராஜ், சரஸ்வதி, ஆகியோர் வெற்றி பெற்றனர்.

திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 26 ஒன்றிய கவுன்சிலர்களில் 16 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க. 7 இடங்களையும், 2 சுயேச்சைகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது. இவர்களில் திமு.க. சார்பில் சுகன்யா, கடும்பாடி கெஜலட்சுமி, ஹேமலட்சுமி, பச்சையப்பன், சரஸ்வதிபாபு, ஜெயபால், தனசேகரன், சின்னம்மாள், வளர்மதி, ஆர்.டி.அரசு, மகேஸ்வரி, சகாதேவன், நூர்ஜகான், மங்கலட்சுமி, அஞ்சாலைபாபு, அ.தி.மு.க. சார்பில் அருள்பிரகாஷ், அபிராமி, எஸ்வந்த்ராவ் ஜெயந்தி, ஹாசாபிவி சத்தியமூர்த்தி, தனபால, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோமதி, சுயேச்சைகளாக சுமதி, செந்தில் வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 10 ஆண்டுகளுக்கு பிறகு பரங்கிமலை ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது
10 ஆண்டுகளுக்கு பிறகு பரங்கிமலை ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது.
2. வாக்குச்சாவடி வளாகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தள்ளுமுள்ளு
ராணிப்பேட்டை அருகே சிப்காட் பகுதியில் வாக்குச்சாவடி மையத்துக்குள் இருந்தவர்களிடம், குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப்போட சொன்னதால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
3. தி.மு.க. அரசை எதிர்க்கட்சியினரும் பாராட்ட தொடங்கி விட்டனர் நலத்திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு
தி.மு.க. அரசை எதிர்க்கட்சியினரும் பாராட்ட தொடங்கி விட்டனர். அரிமளத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
4. அரசியல் தரம் தாழ்ந்து பேசுவதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: புதுச்சேரி சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நமச்சிவாயம் கண்டனம்
அரசியல் தரம் தாழ்ந்து பேசுவதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நமச்சிவாயம் கூறினார்.
5. பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்
பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்.