நாய் குறுக்கே வந்ததால் விபரீதம் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த முதியவர் பலியானார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பொன்னேரி நகரை சேர்ந்தவர் மகேந்திர பிரசாத் (வயது 31). இவர் நேற்று முன்தினம் அவரது மாமனாரான பொன்னேரி அனுப்பம்பட்டு கிராமம் ராஜபாளையம் தெருவை சேர்ந்த கண்ணையா ராஜாவை (61) என்பவரை ஏற்றிக்கொண்டு வேப்பம்பட்டு ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்ததில், நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.
பலி
இந்த விபத்தில் கண்ணையா ராஜாவுக்கு பலத்த காயமும், மகேந்திர பிரசாத்துக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
இதைகண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக பலத்த காயமடைந்த கண்ணையா ராஜாவை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக இறந்து போனார். மகேந்திரபிரசாத்துக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story