மலைரெயிலில் பயணிக்க 4 லட்சம் வாடகை செலுத்திய அதிகாரிகள்
மலைரெயிலில் பயணிக்க 4 லட்சம் வாடகை செலுத்திய அதிகாரிகள்
குன்னூர்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் பயணிக்க ரூ.4.20 லட்சம் வாடகை செலுத்தி ரெயில்வே அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்களுடன் சென்று மகிழ்ந்தனர்.
மலை ரெயில்
நீலகிரி மலை ரெயில், தென்னக ரெயில்வேயின் சேலம் ரெயில் கோட்ட நிர்வாகத்திற்கு உட்பட்டது ஆகும். மலை ரெயில் பாதையை ஆய்வு செய்ய ரெயில்வே அதிகாரிகள் மற்றும் அலுவல்களுக்காக குன்னூர் வழியாக ஊட்டி செல்கின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு பணி நிமிர்த்தமாக ரெயில்வே அதிகாரிகள் தனி மலை ரெயிலில் இலவசமாக செல்ல அனுமதி உண்டு. இந்த நிலையில் ரெயில்வே நிலவள மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் வேதுபிரகாஷ் துதஜா தலைமையில்
செயல் இயக்குனர் விவேக் சக்சேனா, முதன்மை திட்ட மேலாளர் மனோஜ் சர்மா, வருவாய் அதிகாரி அகர்வால், உறுப்பினர் தருண் குமார் கோயல் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் டெல்லியில் இருந்து நேற்று மேட்டுப்பாளையம் வந்தனர்.
அதிகாரிகள் குழு ஆய்வு
அவர்கள், மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் ரெயில்வே துறைக்கு சொந்தமான காலி இடங்களை கண்டறிந்து சுற்றுலா பயணிகளின் கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தனர்.
காலி இடங்கள்
இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் குழுவினர் தங்களின் குடும்பத்தினரு டன் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயிலில் புறப்பட்டு சென்றனர். வந்தனர்.
மலை ரெயில் கல்லாறு ரெயில் நிலையத்தை அடைந்ததும் ரெயில் நிலையம் அருகே மலைப் பகுதியில் தொடங்கும் பல் சக்கரம் பொருத்தப்பட்ட மலை ரெயில் பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து அடர்லி, ஹில்-குரோவ், ரன்னிமேடு, மற்றும் சமவெளிப் பகுதியில் குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் ஆகிய ரெயில் நிலையங்களையும் பார்வையிட்டனர். அங்குள்ள ரெயில் நிலையங்களுக்கு சொந்தமான காலி இடங்களை பார்வையிட்டனர்.
குடும்பத்தினருடன் பயணம்
குடும்பத்தினருடன் செல்வதால் ரெயில்வே அதிகாரிகள், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல மலை ரெயிலை வாடகைக்கு எடுத்தனர்.
அதில் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ரெயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். இதற்காக ரெயில் அதிகாரிகள், ரெயில்வே நிர்வாகத்திற்கு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் குழுவினர் ஆய்வு அறிக்கையை ரெயில்வே வாரிய உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story