தெருநாய்கள் தொல்லை
கோவை மாவட்டம் கூடலூர் பகுதியில் தெரு நாய்கள் தொந்தரவு கட்டுக்கடங்காமல் உள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பயப் படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்கம்பிகளால் ஆபத்து
பேரூர் போஸ்டல் காலனி குறிஞ்சி நகர் 4-வது வீதியில் மின்கம்பம் பழுதடைந்து தாழ்வாக செல்கிறது. மழை போன்ற பேரிடர் காலங்களில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்சார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். |
வேல்முருகன், குறிஞ்சி நகர். |
குண்டும், குழியுமான சாலை
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பால பணி நடந்து வருகிறது. இங்குள்ள ஊட்டி செல்லும் மெயின் ரோட்டில் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள் எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும். |
திருநாவுக்கரசு, பெரியநாயக்கன்பாளையம். |
மின்விளக்குகள் ஒளிருமா?
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மின் விளக்குகள் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் ஒளிர்கிறது. மற்ற பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப் படுகிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே ஒளிராத விளக்குகளை சரிசெய்ய வேண்டும். |
சிவசுப்பிரமணியன், கிணத்துக்கடவு. |
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை சின்னவேடம்பட்டி 27-வது வார்டு பகுதியில் பொது கழிப்பிடத்துக்கு அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற வேண்டும். |
பாக்கியலட்சுமி, சின்னவேடம்பட்டி. |
கால்நடைகள் தொல்லை
பந்தலூர் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்துக்குள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் புகுந்து, அசுத்தம் செய்துவிட்டு செல்கின்றன. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் |
ஒளிராத தெருவிளக்கு
கோவை கணபதி 41-வது வார்டு அலமேலு மங்காபுரம் அருகே விநாயகர் கோவிலுக்கு வடக்கு பக்கம் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு எரியாமல் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே ஒளிராத அந்த தெருவிளக்கை ஒளிர வைக்க வேண்டும். |
சிவகாமி நடராஜன், அலமேலு மங்காபுரம். |
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ஊட்டி புளுமவுண்டன் சாலையில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்பவர்கள் மீது கழிவுநீர் படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டும். |
மழைநீர் தேங்குவதால் அவதி
ஊட்டியில் கனமழை பெய்யும்போது கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது படகு இல்ல சாலையில் தண்ணீர் தேங்குவதால், ரெயில்வே போலீஸ் நிலையத்தை மழைநீர் சூழ்கிறது. தண்ணீர் வடிய நீண்ட நேரமாகிறது. இதனால் போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் அவதி அடைகின்றனர். எனவே தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். |
சதீஷ், மேரீஸ்ஹில், ஊட்டி. |
சாக்கடை கால்வாயில் அடைப்பு
கோவை இருகூர் 11-வது வார்டு ஈஸ்வரன் கோவில் வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் சரிவர செல்லாமல் நிரம்பி வழிந்து சாலையோரத்தில் செல்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதை சரிசெய்ய வேண்டும். |
சாலை அகலப்படுத்தப்படுமா?
குன்னூர் அருகே உள்ள அரவங்காடு-ஜெகதளா கிராமங்களை இணைக்கும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே குறுகலாக உள்ள அந்த சாலையை அகலப்படுத்த வேண்டும். |
பழுதான சாலை
கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும். |
கந்தவேலன், சிங்காநல்லூர். |
குடிநீர் குழாயில் உடைப்பு
கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 15-வது வார்டு பி.என்.புதூரில் சிறுவாணி மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சென்றது. இதை அதிகாரிகள் சரிசெய்தனர். தற்போது மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே அதை சரிசெய்ய வேண்டும். |