கோவில் திருவிழாவில் போலீசார் மீது தாக்குதல்


கோவில் திருவிழாவில் போலீசார் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 16 Oct 2021 2:32 AM IST (Updated: 16 Oct 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவின் போது போலீசார் மீது தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்,

கோவில் திருவிழாவின் போது போலீசார் மீது தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் மீது தாக்குதல்
 பேரையூர் அருகே உள்ள சந்தையூர் தேன் மலையாண்டி கோவிலில் பெட்டி எடுப்பு திருவிழா நடந்தது. இதில் சாமி ஊர்வலத்தின் போது ஒரு சிலர் அவதூறாக பேசி பிரச்சினை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பேரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி, மற்றும் போலீஸ்காரர் முத்துமாணிக்கம் ஆகியோர் பிரச்சினையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த விழா கமிட்டியாளர்களுடன் பேசினர்.
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் மீது கற்கள் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர்.இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி, மற்றும் போலீஸ்காரர் முத்துமாணிக்கம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. 
4 பேர் கைது
இதுகுறித்து 12 பேர் மீது பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தையூரை சேர்ந்த சங்கர்குமார் (வயது 32) மொட்டையசாமி (50) சூர்யா (22) காசிராஜா (44) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Next Story