கோபியில் 25 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது
கோபியில் 25 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
கடத்தூர்
கோபியில் 25 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
மழை வெள்ளம்
கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
கோபி செங்கோட்டையன் நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பலத்த மழையால் செங்கோட்டையன் நகரில் 25 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. 8 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் சம்பந்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டார்கள்.
சாக்கடை வசதி
இதுபற்றி செங்கோட்டையன் நகர் பகுதி மக்கள் கூறும்போது, ‘பல ஆண்டுகளாக இங்கு சாக்கடை வசதி இல்லை. இதனால் மழை பெய்யும் போதெல்லாம் செல்ல வழியில்லாமல் தண்ணீர் தேங்கி விடுகிறது. இந்த தண்ணீரில் இருந்து இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வந்துவிடுகிறது. நாங்கள் தண்ணீர் பிடிக்கும் குழாயை சுற்றிலும் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து தேங்கியிருப்பதால் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே செங்கோட்டையன் நகரில் சாக்கடை வசதி அமைத்து தரவேண்டும்' என்றார்கள்.
Related Tags :
Next Story