அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உயர்வு
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உயர்ந்தது.
அந்தியூர்
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உயர்ந்தது.
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைநீர் ஓடைகள் வழியாக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து சேர்கிறது.
வரட்டுப்பள்ளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் இந்த அணை தண்ணீரையே நம்பி உள்ளன. மேலும் வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளும் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன. இதனால் விவசாயிகளின் தேவையையும், விலங்குகளின் தாகத்தையும் வரட்டுப்பள்ளம் அணை போக்குகிறது.
உபரிநீர்
பர்கூர் மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரட்டுப்பள்ளம் அணைக்கு வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வருகிறது. வரட்டுப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.46 அடி. இதில் தற்போது 31 அடி தண்ணீர் உள்ளது. அணை நிரம்பினால் உபரிநீர் திறந்துவிடப்படும். அந்த தண்ணீர் கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும். இதனால் வரட்டுப்பள்ளம் அணை எப்போது நிரம்பும் என்று அந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.
Related Tags :
Next Story