கத்தி போடும் நிகழ்ச்சி
நெகமம் ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.
நெகமம்
நெகமம் ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.
நவராத்திரி விழா
கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழாவையொட்டி கத்திபோடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
அன்றைய தினம் கணபதி ஹோமத்துக்கு பிறகு அலகு சேர்வை செய்து, சக்தி அழைத்து கொலு ஆரம்பிக்கப்பட்டது. 8-ந் தேதி மாலையில் பெண்கள் திருவிளக்கு வழிபாடு நடத்தினர்.
கத்தி போடும் நிகழ்ச்சி
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று அலகு சேர்வை(கத்தி போடும் நிகழ்ச்சி) செய்து சக்தி அழைத்து முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.
அப்போது நடந்த கத்தி போடும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 12 நாட்கள் விரதம் இருந்து தங்களது உடலை வருத்தி கத்தி போட்டு வந்தனர். இது காணும்போது மெய்சிலிர்க்க செய்தது.
திருக்கல்யாணம்
இதையடுத்து மதியம் 1 மணியளவில் மாவிளக்கு பூஜை, மாலை 4 மணிக்கு அம்பு சேர்வை, அம்மன் திருவீதி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அபிஷேக பூஜை, கொலு நிறைவு செய்தல் ஆகியன நடந்தது. இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story