திருப்பத்தூர் அருகே கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருப்பத்தூர் அருகே கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2021 5:31 AM GMT (Updated: 16 Oct 2021 5:31 AM GMT)

திருப்பத்தூர் அருகே கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டதால் 2 பெண் குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டதால் 2 பெண் குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பால் வியாபாரி

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பத்தூர் தாலுகா ஜம்மணப்புதூர் கூட்ரோடு கவண்டச்சியூர் கிராமத்தில் வசிப்பவர் சம்பத். விவசாயிகளிடம் பால் வாங்கி கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 34) இருவருக்கும் திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகிறது.  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், சம்பத் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமி, திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை ஆத்துமேடு பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் சம்பத்துக்கு அவரது மாமியார் போன் செய்து லட்சுமியை வந்து அழைத்துப் போகும்படியும் கூறியுள்ளார். அதன்படி நேற்று தனது வீட்டுக்கு லட்சுமியை அழைத்துச் சென்றார்.

தற்கொலை

 நேற்று காலை வழக்கம்போல சம்பத் பால் வியாபாரம் செய்வதற்காக அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். அப்போது வீட்டில் இருந்த லட்சுமி திடீரென தனது ேசலையால் வீட்டின் மின் விசிறியில் தூக்கு போட்டு கொண்டுள்ளார். அதைப் பார்த்த அவரது மகள் உடனடியாக தனது பாட்டியிடம் கூறியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் தூக்கில் தெங்கிய லட்சுமியை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர்  இறந்து போனார்.

 தகவலறிந்து வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் லட்சுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லட்சுமியின் தாயார் சரோஜா கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story