பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமையான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
திருவண்ணாமலை காந்திசிலை அருகே உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
பின்னர் தீபாராதனை காண்பித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று வேங்கிகாலில் உள்ள சீனிவாசப்பெருமாள் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள குபேரபெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக புரட்சி மாத 4 சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவில்லை.
அரசின் அனுமதி காரணமாக நேற்று ஏராளமானோர் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story